பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

சேரன்மாதேவி அருகே பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-29 20:16 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே உள்ள காருக்குறிச்சி 2-வது தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் தினேஷ் கண்ணன் (வயது 35). இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தவறாக நடந்து கொண்டு ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சேரன்மாதேவி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தினேஷ் கண்ணனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்