குளச்சல் அருகே திருட்டு வழக்கில் வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை; வைத்தியரின் நகை மீட்பு

குளச்சலில் வைத்தியரிடம் நகை பறித்தவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி நகையை ேபாலீசார் மீட்டனர்.

Update: 2023-05-11 19:33 GMT

குளச்சல், 

குளச்சலில் வைத்தியரிடம் நகை பறித்தவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி நகையை ேபாலீசார் மீட்டனர்.

நகை பறிப்பு

குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் படுவாக்கரையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது71). இவர் செம்பொன்விளை - திக்கணங்கோடு சாலையில் வைத்திய சாலை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 24-ந் தேதி மாலையில் இவர் வைத்திய சாலையில் இருந்த ேபாது இளைஞர் ஒருவர் புகுந்து அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு வெளியே நின்ற கூட்டாளிகளுடன் தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கில் ெதாடர்புடைய நட்டாலம் பொற்றைவிளையை சேர்ந்த அபிஷேக் (22), சாந்தபுரத்தை சேர்ந்த சுபின் (18), மேற்கு கொடுப்பைக்குழியை சேர்ந்த கார்த்திக் என்ற ஜோதி (29) மற்றும் சிவசங்கு (53) ஆகியோரை கைது செய்தனர்.

போலீஸ் காவலில் விசாரணை

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மேற்கு கொடுப்பைக்குழியை சேர்ந்த சிவா (27) வைத்தியரிடம் பறித்த நகையுடன் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி இரணியல் கோர்ட்டில் சரணடைந்தார்.

இதையடுத்து சிவாவை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது வைத்தியரிடம் பறிக்கப்பட்ட நகையை சிவா நாகர்கோவிலில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நகையை போலீசார் ேநற்று மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்