பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் சிக்கினார்

தூத்துக்குடியில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2022-07-11 12:27 GMT

தூத்துக்குடி தாளமுத்துநகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மனைவி நந்தினி (வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தாளமுத்துநகர் ராமதாஸ் நகரை சேர்ந்த முத்துமுகமது மகன் நாகூர் மீரான் (22) என்பவர் நந்தினி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயன்றார். அப்போது அங்கு இருந்தவர்கள் நாகூர் மீரானை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து நந்தினி தாளமுத்துநகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து, நாகூர் மீரானை கைது செய்தார். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்