வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

காரை வழிமறித்து கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது;

Update: 2022-06-13 13:17 GMT

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு தாலுகா பழைய போலீஸ் நிலையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42).

இவர் நேற்று மாலை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

வேலூர் சாலையில் பச்சையம்மன் கோவில் அருகில் உள்ள வேகத்தடை அருகில் செல்லும் போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென காரை வழிமறித்தார்..

பின்னர் அந்த வாலிபர் கத்தி காட்டி மிரட்டி மணிகண்டனின் சட்டை பையில் இருந்து ரூ.1000-த்தை எடுத்து கொண்டு முகத்திலும் வாயிலும் குத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அப்போது மணிகண்டன் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து வாலிபரையும், மோட்டார் சைக்கிளையும் பிடித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் திருவண்ணாமலை சிவசக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சந்துரு (23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்