சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

ஜோலார்பேட்டை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-06 17:38 GMT

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன மோட்டூர் பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகன் ராஜீவ். இவர் கடந்த 4 வருடங்களாக 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5-ந்் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். மேலும் சிறுமி தற்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

இதனால் ராஜிவை, அவரது சகோதரி ராஜேஸ்வரி தனது வீட்டிற்கு அழைத்து சென்று கடந்த 26-ந்் தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைத்து உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுமியின் தந்தை தனது மகளை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீதும் குழந்தை திருமணம் செய்து வைத்த அவரது சகோதரி ராஜேஸ்வரி மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் வழக்குப் பதிவு செய்து அக்கா தம்பியை வலை வீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின்பேரில் சுற்றித்திரிந்த வாலிபரை விசாரணை மேற்கொண்டதில் அவர் ராஜிவ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்