கிணற்றில் தவறிவிழுந்து வாலிபர் பலி
ஆத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் ஊராட்சி முறப்பநாடு பகுதியை சேர்ந்தவர் நாராயணன், விவசாயி. இவருடைய மகன் குணா என்கிற குணசேகரன் (வயது 19). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. நேற்று மாலை இவர்களின் விவசாய நிலத்துக்கு சென்ற குணா எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து விட்டார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராடி குணசேகரனின் உடலை மீட்டனர். இதையடுத்து அங்கு வந்த ஆத்தூர் புறநகர் போலீசார், அவரது உடலை பிரேதபரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.