இளம்பெண் உடல் கருகி சாவு

சங்ககிரி அருகே இளம்பெண் உடல்கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.;

Update:2023-10-26 01:39 IST

சங்ககிரி:-

சங்ககிரி அருகே இளம்பெண் உடல்கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இளம்பெண்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கோபாலனூர் கருவறையான் காடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகள் வனிதா (வயது 23). பி.காம். பட்டதாரி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் சமையல் அறையில் இருந்து உடலில் பற்றி எரியும் தீயுடன் வனிதா அலறி துடித்தார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். தகவல் அறிந்த சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்மணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து வனிதா மீது எரிந்த தீயை அணைத்தனர். அதற்குள் வனிதா உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் வனிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வனிதா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வீட்டில் சமையல் செய்த போது அவர் மீது தீப்பற்றி எரிந்ததில் அவர் பலியானாரா? என்பது குறித்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டதாரி பெண் உடல் கருகி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்