ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

கூட்டுறவு வங்கிகளில் தேவையான அமைப்பு மாற்றங்கள் செய்ய வலியுறுத்தி ஊழியர் சங்கத்தினர் விருதுநகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-29 19:01 GMT

கூட்டுறவு வங்கிகளில் தேவையான அமைப்பு மாற்றங்கள் செய்ய வலியுறுத்தி ஊழியர் சங்கத்தினர் விருதுநகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளையின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் ராமர், சரவணகுமார், சக்திவேல் ராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார். இந்த போராட்டத்தின் போது கீழ்கண்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.

ஊதிய உயர்வு கோரிக்கை சாசனங்கள் மீது உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். ஏற்கனவே ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கருணை ஓய்வு அதிகமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தற்போது பணிபுரியும் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு மாற்று ஓய்வூதிய திட்டம் வழங்க வேண்டும்.

உதவித்தொகை

ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து ஊதியம் பெறும் சலுகை மீண்டும் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளை தற்போதைய பணிநிலை திறன் திருத்தி அமைக்கப்பட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் தேவையான அமைப்பு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். மத்திய அரசு கடன் வழங்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு 2 சதவீத வட்டி உதவித்தொகை வழங்க வேண்டும்.

தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை கூட்டுறவு சங்கங்களுக்கு திரும்ப அளிக்கப்பட வேண்டும். நகர வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆகியவற்றின் பணிகள் முழுவதுமாக கணினி மயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்