மாணவியை கடத்தி சென்ற தொழிலாளி கைது
மாணவியை கடத்தி சென்ற தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் பகுதியை சேர்ந்த 25 வயது தொழிலாளி அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து கடந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியின் தங்கையான 11-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தியதாக தொழிலாளியை கைது செய்தனர்.