மனைவி, குழந்தையை பார்க்க சென்றபோது லாரி மோதி தொழிலாளி பலி

பேரணாம்பட்டு அருகே மனைவி, குழந்தையை பார்க்க சென்றபோது லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-10-21 17:44 GMT

பேரணாம்பட்டு

வேலூர் மாவட்டம் பரதராமி அருகே உள்ள பண்டப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் பிரவின்குமார் (வயது 27), விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி. இவர் பிரசவத்துக்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு கலைஞர் நகரிலுள்ள தாய் வீட்டிற்கு சென்றார் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தையை பார்க்க பிரவின்குமார் பரதராமியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.

செர்லப்பல்லி கிராமம் அருகே பேரணாம்பட்டு - குடியாத்தம் சாலையில் சென்றபோது எதிரே கர்நாடக மாநிலத்தில் இருந்து முட்டைகோஸ் ஏற்றி சென்னை நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரவின்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்