தொழிலாளி வீட்டில் பொருட்களை சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்கு
சாத்தான்குளம் அருகே தொழிலாளி வீட்டில் பொருட்களை சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள தாமரை மொழியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 54). கூலித் தொழிலாளியான இவரது மகன் கருப்பசாமி குரும்பூர் நல்லூரை சேர்ந்த சண்முகம் என்பவரது மகளை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவருகிறது. இந்நிலையில் நேற்று சண்முகம் மகன்கள் மணிகண்டன், ஐயப்பன் மற்றும் முத்து, நவீன் உள்ளிட்ட 6 பேர் சுப்பையா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்குள்ள பொருட்களை தாக்கி சேதப்படுத்தி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மணிகண்டன் உள்பட 6 பேர் மீது தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.