வாணாபுரம் அருகே ஓடையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

வாணாபுரம் அருகே ஓடையில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-12-16 18:45 GMT


ரிஷிவந்தியம், 

வாணாபுரம் அருகே உள்ள அவிரியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் திருவேங்கடம் (வயது 42). கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அதேஊரில் உள்ள பெரியாயி ஓடை கரையில் கரும்பு சோகை கட்டை தலையில் வைத்துக்கொண்டு நடந்து சென்றார். அப்போது அவர் அங்கிருந்த ஓடைக்குள் தவறி விழுந்து விட்டார். இதில் பின் கழுத்தில் பலத்த காயமடைந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திருவேங்கடம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்