ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

ரெயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

Update: 2023-08-07 20:00 GMT

சிவகங்கை மாவட்டம் சிவல்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 39). இவர், சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். சொந்த ஊருக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். இதற்காக சென்னையில் இருந்து மதுரை வரை ரெயிலில் சென்று அங்கிருந்து பஸ் மூலம் சிவல்பட்டிக்கு செல்ல கார்த்திக் முடிவு செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் இவர், சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு-அம்பாத்துரை இடையே இரவில் ரெயில் வந்து கொண்டிருந்தது. ஊத்துபட்டி என்ற இடத்தில் வந்தபோது, திடீரென ரெயிலில் இருந்து கார்த்திக் தவறி கீழே விழுந்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கொடைரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான கார்த்திக்குக்கு பிரியா என்ற மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்