மந்திக் குரங்கு பாய்ந்ததில் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்
விக்கிரமசிங்கபுரம் அருகே மந்திக் குரங்கு பாய்ந்ததில் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கருத்தபிள்ளையூர் ஊரைச் சேர்ந்தவர் எட்வர்ட். சுமை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்று காலை தனது வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் விக்கிரமசிங்கபுரத்துக்கு புறப்பட்டார். செல்லும் வழியில் அருணாசலபுரம் சாலையில் மந்தி குரங்கு ஒன்று இவர் மீது பாய்ந்தது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.