மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

மயங்கி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-05-29 19:15 GMT


விருதுநகர் சிவந்திபுரம் ஆத்துமேட்டு பகுதியை சேர்ந்தவர் லூர்துராஜ் (வயது 36). தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் இவரது முதல் மனைவி இறந்து விட்ட நிலையில் பிரியங்கா என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் பிரியங்காவும் இவரிடமிருந்து பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அங்குள்ள தீப்பெட்டி ஆலை முன்பு லூர்துராஜ் உடலில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த இவரது தாயார் கலாவதி, லூர்துராஜை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கலாவதி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்