களியக்காவிளையில் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

களியக்காவிளையில் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.;

Update: 2023-08-23 17:04 GMT

களியக்காவிளை:

களியக்காவிளை மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 54), தொழிலாளி. இவர் நேற்று வீட்டுக்கு நடந்து சென்றார். மீனச்சல் குளக்கரை பகுதியில் வந்த போது திடீரென பிரான்சிஸ் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது.. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரான்சிசுக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்