ஆற்றில் மூழ்கி தொழிலாளி மாயம்
கொள்ளிடத்தில் ஆற்றில் மூழ்கி தொழிலாளி மாயம் தேடும் பணி தீவிரம்
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள சந்தபடுகை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது50). கூலி தொழிலாளி. இவர் நேற்று சந்தப்படுகை கிராமத்தில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அக்கறை பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற மாரியப்பன் ஆற்றில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரத்தினவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து படகின் மூலம் ஆற்றில் மாரியப்பனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.