விபத்தில் தொழிலாளி பரிதாப சாவு
மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாப சாவு
நாங்குநேரி:
களக்காடு அருகே உள்ள வெங்கட்ரெங்கபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்தார். இவரது மனைவி ஊரான கேசவநேரியில் நடந்த கோவில் திருவிழாவுக்காக சுரேஷ் வந்துள்ளார். விழா முடிந்ததும் நெல்லைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தார்.
நாங்குநேரி தாலுகா அலுவலகம் எதிரே வந்தபோது நிலை தடுமாறி சாலை நடுவில் உள்ள தடுப்பு கம்பியில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. இதில் சுரேஷ் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.