விபத்தில் தொழிலாளி பலி

சிவகாசி அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.

Update: 2022-08-31 19:36 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டியை சேர்ந்தவர் கணபதி மகன் ராமநாதன் (வயது 42). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பேப்பர் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் தனது வீட்டில் இருந்து அதே பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ராமநாதன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் நேற்று காலை ராமநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உறவினர் பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சுக்கிரவார்பட்டி நடுத்தெருவை சேர்ந்த கேசவன் மீது எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்