கூடலூர்
கூடலூர் அப்துல் கலாம் நகர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வாலிபர் ஒருவர் திடீரென குதித்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கூடலூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி வாலிபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.ஆனால் நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தகவல் அறிந்த கூடலூர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த காம நாதன் மகன் பாலா (வயது 34) என்ற கூலித்தொழிலாளி என தெரிய வந்தது. மேலும் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்துகொண்டார் என தெரியவில்லை. பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் கூடலூர் அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பும் சோகமும் ஏற்பட்டது.