வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தொடக்கம்

பரப்பாடி பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி தொடக்க விழா நடந்தது.

Update: 2022-08-27 18:54 GMT

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் இலங்குளம் பஞ்சாயத்து பரப்பாடி, இலங்குளம் பகுதிகளில் ரூ.25 லட்சம் மதிப்பில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க புதிய பைப்லைன் அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் தலைமை தாங்கி, பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் வெங்கட்ராயபுரத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் செல்லத்துரை, ஒன்றிய கவுன்சிலர் பிரேமா, வெங்கட்ராயபுரம் பஞ்சாயத்து தலைவர் பேச்சியம்மாள் சுடலை, கட்சி நிர்வாகிகள் அந்தோணிராஜ், ஆனந்தராஜன், செல்லத்துரை, தனிஸ்லாஸ், ஜேசுமணி, கல்யாணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்