பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணி

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் பணி

Update: 2023-04-01 18:45 GMT

வால்பாறை

வால்பாறை பகுதியில் பகலில் வெயிலும், மாலையில் மழையும் கொண்ட இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இனிவரும் நாட்களில் பள்ளி விடுமுறை நாட்கள் வர உள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய வால்பாறை காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் பணி நடைபெற்றது. மேலும் நகராட்சி அலுவலக பகுதியிலும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. இது தவிர அனைத்து சுற்றுலா தலங்களிலும் கபசுர குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்