குடிநீர் குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடக்கம்

குடிநீர் குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடங்கியது.

Update: 2023-04-17 19:21 GMT

தாயில்பட்டி

சிவகாசி நகராட்சிக்கு குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக வெம்பக்கோட்டை அணையில் இருந்து குழாய் பதிக்கும் பணி கடந்த 2 மாதத்திற்கு முன்பு தொடங்கியது. சில தினங்கள் மட்டுமே நடைபெற்ற குழாய் பதிக்கும் பணி இடையில் நிறுத்தப்பட்டது. தற்போது வனமூர்த்திலிங்கபுரத்திலிருந்து சத்திரப்பட்டி, மடத்துப்பட்டி, மண்குண்டாம்பட்டி, பேர்நாயக்கன்பட்டி வரை குடிநீர் குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்