சீர்காழி சட்டநாதர் கோவில் முன்பு தோரண வாயில் அமைக்கும் பணி

குடமுழுக்கை முன்னிட்டு சீர்காழி சட்டநாதர் கோவில் முன்பு தோரண வாயில் அமைக்கும் பணி தருமபுரம் ஆதீனம் அடிக்கல் நாட்டினார்

Update: 2023-01-21 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சீர்காழியில் பிறந்து ஞானம் பெற்று தனது 3-வது வயதில் 'தோடுடைய செவியன்' என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோவிலில் தனிச்சன்னதி உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு அதற்கான திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து திருப்பணிகளை விரைந்து முடித்து மே மாதம் 24-ந் தேதி குடமுழுக்கு நடத்த தருமபுரம் ஆதீனம் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சட்டநாதர் கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், கிழக்கு கோபுரத்திற்கு முன்பு தோரண வாயில் அமைப்பதற்கான பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் செந்தில், வக்கீல் பாலாஜி, அரசு ஆஸ்பத்திரி மருந்தாளுனர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்