தென்னை நாரை உலர வைக்கும் பணி மும்முரம்

நெகமம் பகுதியில் மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளதால், தென்னை நாரை உலர வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-12-28 18:45 GMT

நெகமம்

நெகமம் பகுதியில் மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளதால், தென்னை நாரை உலர வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தென்னை நார் தொழிற்சாலைகள்

நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தென்னை சார்ந்த தொழில்கள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக தென்னை நார் உற்பத்தியில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருகின்றன.

பச்சை தேங்காய் மட்டையில் இருந்து வெள்ளை நிற நாரும், காய்ந்த மட்டையில் இருந்து கருப்பு நிற நாரும் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பெரும்பாலான நார் கயிறு கேரளாவிற்கும், சீனாவிற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

உலர வைக்கும் பணி

இதற்கு மட்டையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நாரை வெயிலில் காய வைப்பது அவசியம். தென்னை நார் வெயிலில் நன்றாக உலர்ந்தால்தான் அதனுடைய தரம் அதிகமாக இருக்கும். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக தென்னை நாரை உலர வைக்கும் பணி பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. இதனால் தென்னை நாரை உலர வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தென்னை நார் உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்