பெரிய வாய்க்கால் தூர்வாரும் பணிகளை உடனே தொடங்க வேண்டும்

பெரிய வாய்க்கால் தூர்வாரும் பணிகளை உடனே தொடங்க வேண்டும்

Update: 2023-05-07 19:58 GMT

அய்யம்பேட்டை பகுதியில் தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற் பயிர்களை காப்பாற்ற பெரிய வாய்க்கால் தூர்வாரும் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் மழை

அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில், சூலமங்கலம், புண்ணியநல்லூர், வையச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் 500-க்கும் பேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் முன்பட்ட குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது இந்த பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் நடவு செய்து 10 முதல் 15 நாட்களே ஆன நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே இந்த பகுதி வயல்களுக்கு வடிகாலாக உள்ள பெரிய வாய்க்கால் தூர்வாரும் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்க்காலை தூர்வார வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது,

எங்கள் பகுதி வயல்களுக்கு வடிகாலாக உள்ள பெரிய வாய்க்கால் ஆகாய தாமரைகள் மண்டி கிடக்கிறது. இதனால் தற்போது வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த மழை தொடர்ந்தால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். தமிழக அரசின் தூர்வாரும் திட்டத்தின் கீழ் பெரிய வாய்க்காலை தூர் வாருவதற்காக ரூ.9.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தூர்வாரும் பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை. எனவே பெரிய வாய்க்கால் தூ

Tags:    

மேலும் செய்திகள்