மயிலாடும்பாறை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
மயிலாடும்பாறை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.
மயிலாடும்பாறை அருகே தென்பழனி காலனியை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி தங்கமீனா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. இந்தநிலையில் தங்கமீனா கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக பல்வேறு இடங்களில் தங்கமீனா சிகிச்ைச பெற்றார். ஆனால் வயிற்றுவலி சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட தங்கமீனா இன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தங்கமீனாவுக்கு திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆவதால் பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.