பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

Update: 2022-08-19 19:44 GMT

வல்லம்

தஞ்சையை அடுத்துள்ள திருக்கானூர்பட்டி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் நாகராசு. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 35). நாகராசு ஏற்கனவே இறந்துவிட்டார். இதையடுத்து ஜெயலட்சுமி, வல்லம் கடைவீதி அண்ணாசிலை அருகே பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் வல்லம் நடுத்தெருவை சேர்ந்த சின்னதுரை (50) என்பவர், ஜெயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த சின்னதுரை, ஜெயலட்சுமியை தாக்கி கடையில் இருந்த பழங்களை தரையில் கொட்டி சேதப்படுத்தினார். இதுகுறித்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்