பெண்ணை தாக்கியவர் கைது
வேதாரண்யத்தில் பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கோடியக்கரை அண்ணாநகா் பகுதியைச்சோ்ந்த காமாட்சி (வயது36). இவர் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த கோடியக்காட்டை சோ்ந்த சுப்பிரமணியன் (25) என்பவா் காமாட்சியை தரக்குறைவாக பேசி தாக்கினார். இதுகுறித்து காமாட்சி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் கேத்ரின் எஸ்தா், முருகானந்தம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.