சேரன்மாதேவி:
பத்தமடை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் சுந்தர் (வயது 45). இவர் கேரளாவில் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் பத்தமடை சிவானந்தாகாலனி காந்தி நகர் 6-வது தெருவை சேர்ந்த கணபதி மகன் தங்கப்பெருமாள் (64) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதனை மனதில் வைத்துக் கொண்டு, தங்கப்பெருமாள் வீட்டின் அருகே சென்ற சுந்தரின் மனைவி பார்வதியிடம் (40) அவதூறாக பேசி கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பார்வதி அளித்த புகாரின் பேரில் பத்தமடை போலீசார் வழக்குபபதிவு செய்து தங்கப்பெருமாளை கைது செய்தனர்.