மாவு அரைக்க கிரைண்டரை தயார்படுத்திய பெண், மின்சாரம் தாக்கி பலி

மாவு அரைக்க கிரைண்டரை தயார்படுத்திய பெண், மின்சாரம் தாக்கி பலியானார்.

Update: 2022-11-04 18:52 GMT

ராஜபாளையம், 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஐ.என்.டி.யு.சி. நகரை சேர்ந்தவர் பாஸ்கரபாண்டியன். தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராமலட்சுமி (வயது 45). இந்தநிலையில் கணவர் மற்றும் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றிருந்தனர். ராமலட்சுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மாவு அரைப்பதற்காக கிரைண்டரை தயார்படுத்தி உள்ளார். மழை பெய்து கொண்டிருந்ததால் ஒயரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு ராமலட்சுமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி முடிந்து மகன் விஷ்ணு சங்கர் வீட்டுக்கு வந்தபோது,, தாயார் ராமலட்சுமி மின்சாரம் பாய்ந்து பலியாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் தகவல் அறிந்து விரைந்து வந்தனர். ராஜபாளையம் தெற்கு போலீசார், ராமலட்சுமி உடலை மீட்டு பரிேசாதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்