மதுவிற்ற பெண் தப்பி ஓட்டம்

மதுவிற்ற பெண் தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-10-16 18:39 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கீழநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்று கொண்டிருந்த பெண்ணை போலீசார் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அங்கு கிடந்த 10 மதுபாட்டில்களை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து தப்பிய ஓடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்