தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கழுகூர் அ.உடையாபட்டியில் ஒரு பெட்டிக்கடையில் அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் மனைவி மாரியாயி (வயது 45) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து மாரியாயியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.