மது பாட்டில்களை கடத்தி வந்த பெண்

மது பாட்டில்களை கடத்தி வந்த பெண் போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்

Update: 2022-11-27 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் மரக்காணம் ரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பெண், போலீசாரை கண்டதும் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த 45 மதுபாட்டில்கள் இருந்த பையை கீழே போட்டு விட்டு தப்பி சென்றார். அந்த மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த திண்டிவனம் நத்தமேடு நரிக்குறவர் காலனியை சே்ாந்த சுமன் மனைவி ஜெயந்தி என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்