கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-27 12:40 GMT

கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில் ஒரு பெண் மனு அளிக்க வந்தார். அவர் கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் கலெக்டர் காரில் ஏறி கிளம்பும் போது அவரிடம் அந்தபெண் மனு குறித்து பேசினார்.

அப்போது அந்த பெண் சத்தமாக பேசியதால், அங்கிருந்த போலீசாரிடம் விசாரிக்குமாறு கலெக்டர் கூறினார். இதனிடையே அந்த பெண் திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணுக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்