வீடு புகுந்து நகை திருடிய பெண் சிக்கினார்

வீடு புகுந்து நகை திருடிய பெண் சிக்கினார்

Update: 2023-07-27 21:49 GMT


மதுரை சிந்தாமணி புது தெரு நெடுங்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் முருகன் மனைவி மகாலட்சுமி (வயது 26). சம்பவத்தன்று மணிகண்டன் குடும்பத்துடன் வெளியூர் செல்ல முடிவு செய்தார். எனவே வீட்டின் கதவை பூட்டி பக்கத்து வீட்டு மகாலட்சுமியிடம் சாவியை கொடுத்து விட்டு சென்றார். பின்னர் மணிகண்டன் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. இந்த திருட்டு குறித்து அவர் கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சாவியை கொடுத்துச் சென்ற மகாலட்சுமி கதவை திறந்து திருடியது தெரியவந்ததை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்