பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா

திருப்பத்தூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

Update: 2023-01-06 18:34 GMT

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றிய குழு தலைவர் விஜியா அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் டி.ஆர்.ஞானசேகரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் வரவேற்றார்.

கூட்டத்தில் பிருந்தாவதி வைகுந்தராவ் (தி.மு.க.) ஜவ்வாது மலை நெல்லிவாசல் நாடு ஊராட்சிக்கு இதுவரை எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. பலமுறை தங்களிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மலையாண்டிபட்டி சிமெண்டு சாலை கேட்டு ரூ.6.50 லட்சம் ஒதுக்கி தருவதாக கூறி இருந்தீர்கள். ஆனால் ஒன்றிய குழு கூட்ட அஜண்டாவில் வரவில்லை என்று கூறி தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனடியாக துணைத்தலைவர் டி.ஆர்.ஞானசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகி்யோர் அவரை சமாதானம் செய்து இந்தக் கூட்டத்தில் உங்களுடைய தீர்மானம் வந்துள்ளது என தெரிவித்தனர். அதற்கு பிருந்தாவதி வைகுந்தராவ் என்னுடைய கையில் உள்ள அஜண்டாவில் தீர்மானம் இல்லை என கூறினார். உடனடியாக இன்னும் தங்களுக்கு வழங்கப்படாத அஜன்டாவில் மலையாண்டிபட்டி சாலை அமைக்கும் தீர்மானம் உள்ளதாக கூறி அதனை படித்து காட்டினார்கள், பின்னர் அனைவரும் சமாதானம் கூறியதால் எழுந்து தனது நாற்காலியில் அமைந்தார்.

டாக்டர் திருப்பதி (அ.தி.மு.க.), சுடுகாட்டுக்கு செல்ல தற்காலிக இரும்பு பாலம், எரிவாயு தகனம் மேடை அமைத்து தர வேண்டும்.

தலைவர் விஜயா அருணாச்சலம்: தற்காலிக இரும்பு பாலம் அமைக்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து டெண்டர் விடப்பட்டு விரைவில் பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது மற்ற பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

யுவராஜ் (அ.தி.மு.க.), டி.ஆர்.ஞானசேகரன் (தி.மு.க.) உள்ளிட்ட கவுன்சிலர்களும் பேசினர். இறுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்