பள்ளியில் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கம்பிகள் மாயம்
பள்ளியில் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கம்பிகள் மாயமாகியது.
காரையூர் அருகே மேலத்தானியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக சுமார் 2,134 கிலோ கம்பிகள் வாங்கி பள்ளியில் வேலை நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதில் சுமார் 1,500 கிலோ எடையுள்ள கம்பிகள் காணாமல் போய் உள்ளது. இது குறித்து பில்லணிவயல் கிராமத்தை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் கணேசன் மனைவி வளர்மதி (வயது 55) காரையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.