சவுக்கு கட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி பலி

பள்ளிகொண்டா அருகே சவுக்கு கட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.

Update: 2022-06-26 12:07 GMT

பள்ளிகொண்டாவை அடுத்த கழனிப்பாக்கம் பீமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அமாவாசை கான். இவரது மகன் ஜம்புலிங்கம் (வயது 37). தொழிலாளி. இவர் ராமாபுரம் கோகுல் என்பவருக்கு சொந்தமான விறகு மற்றும் சவுக்குக் கட்டைகளை டிராக்டரில் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டை சரிந்து ஜம்புலிங்கம் தலை மீது விழுந்தது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாசாரணை நடித்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்