முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2022-10-02 18:19 GMT


கம்பம் ஊராட்சி ஒன்றியம் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில்  கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைவர் பொன்னுத்தாய் குணசேகரன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 152 அடி உயர்த்தவும், 5 மாவட்ட பாசன நிலங்களுக்கு தண்ணீர் தேவைக்காக ரூல் கர்வ் விதியை ரத்து செய்ய கோரியும், அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல் ஆங்கூர்பாளையத்தில் ஊராட்சி தலைவர் சாந்தி பரமன், கருநாக்கமுத்தன்பட்டியில் தலைவர் மொக்கப்பன், சுருளிப்பட்டியில் தலைவர் நாகமணி வெங்கடேசன், நாராயணத்தேவன்பட்டியில் தலைவர் பொன்னுத்தாய் செல்லையா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். ரூல் கர்வ் விதியை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்