மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் சரிந்து 106.61 அடியானது...!

அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Update: 2023-01-22 04:40 GMT

மேட்டூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. கடந்த 19-ம் தேதி விநாடிக்கு 1022 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 755 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து 824 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஷ

அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.

கடந்த 19-ம் தேதி 108.37 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 107.2 அடியாக சரிந்தது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து காலை 8 மணி நிலவரப்படி 106.61 அடியானது. இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் 2 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்