பெரியகுளம் கண்மாயில் வேகமாக குறைந்து வரும் நீர்மட்டம்

வத்திராயிருப்பு அருகே பெரியகுளம் கண்மாயில் வேகமாக நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2022-06-10 19:26 GMT

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே பெரியகுளம் கண்மாயில் வேகமாக நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பெரியகுளம் கண்மாய்

வத்திராயிருப்பில் இருந்து கூமாப்பட்டி செல்லும் சாலையில் பெரியகுளம் கண்மாய், வீராக சமுத்திரம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த இரு கண்மாயை நம்பி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் தென்னை, நெல் ஆகியவற்றை விவசாயம் செய்து வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த கண்மாய் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கோடை கால நெல் அறுவடை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அறுவடை முடித்தவர்கள் முதல் போக நெல் சாகுபடி செய்வதற்காக விவசாய பணியினை தொடங்குவதற்கு வயல்களை தயார் செய்து வருகின்றனர்.

விவசாயிகள் வேதனை

இந்நிலையில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள சூழ்நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் முழுவதும் குறைந்து வருகின்றது. கடும் வெயிலின் காரணமாக நீர்மட்டம் வெகுவாக குைறந்து வருகிறது.

தற்போது முதல் போக நெல் நடவு செய்வதற்க்காக நெல் நாற்றங்கால் பாவ போதுமான தண்ணீர் கிணறுகளில் இருப்பதால் நாற்றங்கால் பணியை தொடங்கி உள்ளோம். மேலும் கண்மாயில் தற்போது 20 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டால் நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்