முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

Update: 2023-08-05 21:15 GMT

தமிழக-கேரள எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. அவ்வப்போது நீ்ர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தாலும் அணைக்கான நீர்வரத்து சராசரியாகவே இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,321 கன அடி வரை அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 121.60 அடியாக உயர்ந்தது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.40 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 290 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 400 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்