மயங்கி விழுந்து காவலாளி சாவு

விருதுநகர் அருகே மயங்கி விழுந்து காவலாளி இறந்தார்.

Update: 2022-09-03 18:21 GMT

விருதுநகர் அருகே உள்ள மீசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 63). தனியார் உணவகத்தில் காவலாளியான இவர் நோய் பாதிப்பு காரணமாக தன்னுடன் வேலை பார்க்கும் ரங்கராஜன் என்பவருடன் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இடையில் வரும் போது இருசக்கர வாகனத்தை நிறுத்த சொல்லி கீழ இறங்கி நின்ற லோகநாதன் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது பற்றி அவரது மனைவி அம்சலா தேவி (50) கொடுத்த புகாரின்பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்