பழைய வீட்டை இடித்தபோது சுவர் விழுந்து தொழிலாளி பலி

பணகுடியில், பழைய வீட்டை இடித்தபோது சுவர் இடிந்து தொழிலாளி இறந்தார்

Update: 2022-12-23 21:42 GMT

பணகுடி:

பணகுடியில், பழைய வீட்டை இடித்தபோது சுவர் இடிந்து தொழிலாளி இறந்தார்.

தொழிலாளி

பணகுடி அண்ணாநகர் ஸ்ரீராம்புரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகன் பெருமாள் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று பணகுடியில் உள்ள பழைய வீட்டின் சுவரை இடிக்கும் பணியில் பெருமாள் ஈடுபட்டு இருந்தார். அப்போது சுவரின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து பெருமாளின் மீது விழுந்தது.

சாவு

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பணகுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பெருமாள் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்ததும், பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, இறந்த பெருமாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்