மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர்களை மடக்கி பிடித்து எச்சரித்த கிராம மக்கள்

கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர்களை கிராம மக்கள் மடக்கி பிடித்து எச்சரித்து அனுப்பினர்.

Update: 2023-01-30 18:45 GMT

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பண்பொழி பகுதி, விவசாயம் நிறைந்த பகுதியாகும். இதனால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், வாகன ஓட்டிகள் என பல்வேறு தரப்பினர் நாள்தோறும் இந்த சாலையில் சென்று வருகின்றனர். இந்த சூழலில் ஆபத்தை உணராமல் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை இயக்கிய படி சில வாலிபர்கள் சாகசங்கள் செய்வதால், மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இதுபோன்று செயல்பட்டு வரும் வாலிபர்களை போலீசார் பிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மேக்கரை பகுதியில் சில வாலிபர்கள், மோட்டார் சைக்கிள் சாகத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த கிராம மக்கள், அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து எச்சரித்து அனுப்பினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்