மலைப்பாதையை சீரமைத்த கிராம மக்கள்

வீட்டுக்கு ஒருவர் என பங்கேற்று கிராம மக்கள் மலைப்பாதையை சீரமைத்தனர்.

Update: 2022-09-21 19:18 GMT

வீட்டுக்கு ஒருவர் என பங்கேற்று கிராம மக்கள் மலைப்பாதையை சீரமைத்தனர்.

மலைப்பாதை

உப்பிலியபுரத்தை அடுத்துள்ளது பச்சமலை. இது திருச்சி, சேலம், பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில் திருச்சி மற்றும் சேலம் மாவட்டத்திற்குட்பட்ட தென்புறநாடு, ஆத்திநாடு பகுதிகளுக்கு, சோபனபுரத்திலிருந்து டாப்செங்காட்டுப்பட்டி வழியாக மட்டுமே செல்லமுடியும். 14 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த மலைப் பாதை சாலை வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை 10 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் இச்சாலை மிகவும் மோசம் அடைந்தது. இதனையடுத்து இந்த சாலையை சீரமைக்க மாவட்ட கலெக்டரின் நல நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ்மக்கள் ஒன்று கூடி சோபனபுரம் வனத்துறை சோதனை சாவடியிலிருந்து டாப்செங்காட்டுப்பட்டி வரை செல்லும் சாலையோரத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றினர்.

வீட்டுக்கு ஒருவர்

டாப்செங்காட்டுப்பட்டி, புத்தூர், நச்சிலிப்பட்டி, பூதக்கால், கருவங்காடு, குண்டகாடி, சித்தூர், பெரும்பரப்பு, சேம்பூர், லட்சுமணபுரம், கம்பூர், தண்ணீர்பள்ளம், கீழ்க்கரை, சோளமாத்தி, என்.புதூர், வெங்கமுடி, மைலகுளம், சின்னபக்களம், பெரியபக்களம், பழையூர், புனவரை, நெய்வாசல், ஓடைக்காடு, கொடுங்கல், முள்ளிகுளம், மாயம்பாடி, சேப்பகம், விளாமாத்தூர், மேல்வஞ்சாரம், நடுவஞ்சாரம், தாழ்வஞ்சாரம், நாகூர், சின்ன நாகூர், நல்லமாத்தி, பெரியமங்களம், சின்னமங்களம் ஒண்டிகாடுபுதூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒரு வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வந்து மலைவாழ் நல தலைவர் ராமசாமி முன்னிலையில் இந்த பணியில் ஈடுபட்டனர். காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இப்பணி நடைபெற்றது. விரைவில் இங்கு சாலை அமைக்கப்படும் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்