மண் அள்ளிய லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்

வேடசந்தூர் அருகே மண் அள்ளிய லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

Update: 2023-03-16 19:00 GMT

வேடசந்தூர் அருகே வி.புதுக்கோட்டையில் பொம்ம கவுண்டர்குளம் உள்ளது. இந்த குளத்தில், கடந்த 2 நாட்களாக லாரிகளின் மண் அள்ளப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மண் அள்ளுவதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், மண் அள்ளிய லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வி.புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இனிவருங்காலத்தில் இதுபோன்று மண் அள்ளினால் போலீசில் புகார் கொடுத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாரி உரிமையாளரை ஊராட்சி மன்ற தலைவர் எச்சரித்தார். மேலும் கிராம மக்களிடம், இந்த ஒரு முறை மட்டும் மன்னித்து விட்டு விடுங்கள். இனி இதுபோன்று நடந்தால் உங்களுடன் சேர்ந்து நானும் போராட தயாராக இருக்கிறேன் என்று ஊராட்சி தலைவர் தெரிவித்தார். இதனையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்