கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராதாபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன், ராதாபுரம் வட்ட தலைவர் சகாதேவன், வட்ட செயலாளர் மணிகண்டன், பொருளாளர் விஜய், துணை தலைவர் செந்தில்குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் இசக்கியப்பன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.