கிராம நிர்வாக அலுவலரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதம்
கிராம நிர்வாக அலுவலரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
கிராம நிர்வாக அலுவலரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
ஆம்பூரை அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சி பகுதியில் அத்திமா குலப்பள்ளி கிராமம் உள்ளது. இந்த ஊர் மக்கள் அங்கு உள்ள புறம்போக்கு இடத்தில் குலதெய்வக் கோவில் கட்டுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் பாரதியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.